ECONOMYNATIONAL

பாடாங் செராய் தொகுதியில் தொழிலாளர்கள் வாக்களிக்க அனுமதியளிப்பீர்- ஹராப்பான் வேட்பாளர் வேண்டுகோள்

கூலிம், நவ 28- அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ள பாடாங் செராய் தொகுதிக்கான தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கும்படி தனியார் துறை முதலாளிகளை பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் முகமது சோஃபி ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்களிப்பு தினத்தன்று சிறப்பு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்க கெடா மாநில அரசு தயாராக இல்லாத காரணத்தால் அன்றைய தினம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கான அனுமதியை முதலாளிகள் வழங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக வெளியில் வருவது சிரமமான காரியமாக உள்ளது. வழங்கப்படும் ஒரு மணி நேரம் வாக்களிப்பதற்கு போதுமானதாக இல்லை. ஆகவே, ஊழியர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அதே வேளையில் அவர்களின் சம்பளத்திலும் பிடித்தம் செய்ய வேண்டாம் என முதலாளிகளைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் செலாசேவில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடாங் செராய் தொகுதியில் மட்டும் வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினம் சிறப்பு பொது விடுமுறை வழங்க இயலாது என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர்  அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த 19ம் தேதி நடைபெற்ற பதினைந்தாவது பொதுத் தேர்தலில்  பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட ஹராப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா பிரசார காலத்தில் திடீரென மரணமடைந்த


Pengarang :