ALAM SEKITAR & CUACA

ஆறு மாநிலங்களுக்கு வெள்ளத் தயார் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், நவ 29 – ஜொகூர், பேராக், கெடா, பகாங், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (டிஐடி) வெள்ள எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

(மெட்மலேசியா) வானிலை முன்னறிவிப்பு, தென்கிழக்கு “ஆசியா-ஓசியானியா ஃப்ளாஷ்“ வெள்ள வழிகாட்டு அமைப்பு (SAOFFGS), டிஐடி வெள்ள ஊகிப்பு மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு டிஐடி மேற்கண்ட மாநிலங்களில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என இன்று அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

ஜொகூரில் ஜோகூர் பாரு (ஜெலுத்தோங், தஞ்சோங் மற்றும் குபாங்) அத்துடன் பொந்தியான் (ஜெரம் பத்து, சுங்கை கரங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்) பேராக்கில் லாருட், மாத்தாங் மற்றும் செலாமா உலு செலாமா, உலு இஜோக் மற்றும் செலாமா) ஆகிய இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கெடாவில், பண்டார் பாரு (சுங்கை பத்து) மற்றும் கூலிம் (தேராப்), பகாங்கில் தெமர்லோ (செமந்தான்), பெந்தோங் (சபாய் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்), சிலாங்கூரில் உலு சிலாங்கூர் (உலு பெர்ணம்) மற்றும் உலு லங்காட் மற்றும் நெகிரி செம்பிலானில் ஜெலுபு (கெனாபோய், கிளாமி லெமி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்), குவாலா பிலா (லங்காப் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்) ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் எந்நேரத்திலும் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு களுக்கு தயாராக இருக்க இந்த தயார்நிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேலும் தகவலுக்கு https://publicinfobanjir.water.gov.my, முகநூல் @PublicInfoBanjir மற்றும் டுவிட்டர் @JPS_InfoBanjir யைப் பார்வையிடலாம்.

– பெர்னாமா


Pengarang :