ECONOMY

கோம்பாக்கில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் சுகாதார பரிசோதனை மற்றும் இலவச மோட்டார் சைக்கிள் கருப்பு எண்ணெய் மாற்றும் திட்டத்தில் பங்கேற்றனர்

ஷா ஆலம், நவ 29; கடந்த சனிக்கிழமை கோம்பாக்கின் சன்வே பத்து கேவ்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற சன்தாய் பெஸ்ரா திட்டம் (ஜேகேபி) பகுதி 9 தில்  வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் வரவேற்பைப் பெற்றது இத்திட்டம்.

குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெய் மாற்றும் திட்டம்  மற்றும் இலவச சுகாதாரப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கோம்பாக்  செத்தியா மாநிலச் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ரஹீம் கஸ்தி தெரிவித்தார்.

உள்ளூர் மக்களுடன் உறவை  சமூகத் தலைவர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் வலுப்படுத்தி கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.

காலை மணி 9 முதல் மதியம் மணி 2 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  எம் பி எஸ் பகுதி 9 தின் நகராண்மைக் கழக  உறுப்பினர், முகமட் சியாம் சாமான் முகமட் சுஹைமி,  கிராம தலைவர் மற்றும் உள்ளூர் சமூக தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியிருப்போர் சங்கம், சுராவ் மற்றும் நகராண்மைக் கழக  உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, மாநில அரசின் திட்டங்கள் அதாவது இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்  உதவித் திட்டங்கள் மற்ற பல  திட்டங்கள் பற்றித் தகவல்களை வழங்குவதற்கான ஒரு தளமாகும்.

“உண்மையில், மக்களுடனான எங்கள் உறவை வலுப்படுத்துவது டன், மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியத் தகவல்களையும் இதுப்போன்ற  நிகழ்ச்சிகளின் வழி நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

ReplyForward

Pengarang :