HEALTH

கலவர எச்சரிக்கை காணொளி தொடர்பில் விளக்கமளிக்க டிக்டாக் நிர்வாகத்திற்கு உத்தரவு

கோலாலம்பூர், டிச 1- மே 13 கலவரத்தை தொடர்பு படுத்தி சினமூட்டும் வகையிலான மூன்று காணொளிகள் வெளியிடப்பட்டது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக டிக்டிக் நிர்வாகத்தினரை அரச மலேசியப்  போலீஸ் படையின் துணையுடன் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அழைத்துள்ளது.

நல்லிணக்கத்திற்குப் பாதிப்பையும் வெறுப்புணர்வு மற்றும் தப்பெண்ணத்தை உருவாக்கி  உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலான சினமூட்டும் உள்ளடக்கங்களை வெளியிடுவது குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) கீழ் குற்றம் என்பதோடு இத்தகையக் குற்றங்களைப் புரிவோருக்கு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இத்தகைய உள்ளடக்கங்களைக் கொண்ட காணொளிகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாக கருதப்படும். இதனால், நாட்டில் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு பிரிவினை, குழப்பம் தப்பெண்ணம், வெறுப்புணர்வு மற்றும் இன, மதம் தொடர்புடைய விவகாரங்களும் தோன்றுவதற்கு வழி வகுக்கும் என அது தெரிவித்தது.

இத்தகையக் காணொளிகளின் உள்ளடக்கங்களைத் தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதோடு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய காணொளிகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அந்த ஆணையம் குறிப்பிட்டது.


Pengarang :