இன்று தொடங்கி ஞாயிறு வரை எட்டு மாநிலங்களில் கனமழை எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், டிச 1: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 8 மாநிலங்களில் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அம்மாநிலங்கள் பெர்லிஸ், கெடா, பினாங்கு, கிளந்தான், திராங்கானு, பேராக், பகாங் மற்றும் சபா ஆகியவை என டைரக்டர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா கூறியுள்ளார். தி ஸ்டார் இதை செய்தியாக வெளியிட்டுள்ளது.

“பலமான கிழக்குக் காற்று டிசம்பர் 5 வரை சபாவின் கிழக்கிலும் கிழக்கு கடற்கரையிலும் தீபகற்பத்தின் வடக்குப் பகுதியிலும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், டிசம்பர் 2-ம் தேதி தென் சீனக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், டிசம்பர் 3 முதல் 4 வரை மலேசியா-தாய்லாந்து எல்லை வழியாக மேற்கு அந்தமான் கடலை நோக்கி அது நகரும் என்றும் அவர் கூறினார்.

கிளந்தான் மற்றும் திராங்கானு கடலோர பகுதிகளில் புயல் ஏற்படக்கூடும் என்பதனால் கடல் நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும்  அண்மையத்  தகவல்களுக்கு http://www.met.gov.my , அகப்பக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் “myCuaca“ ஆகியவற்றை நாடவும் என முஹம்மது ஹெல்மி பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.


Pengarang :