SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

ஷா ஆலம், டிச 3: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்றிரவு சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 ஐ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஷா ஆலம் பொது மாநாட்டு  மையத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில் சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பிபிஏஎஸ்) இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமதுவும் கலந்து கொண்டார்.

அதே விழாவில், யூசப் கஜா இல்லஸ்ட்ரேட்டர் விருது 2023 உம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

2006 தொடங்கி தற்போது 16 முறையாக நடத்தப்படும் சிலாங்கூர் புத்தகக் கண்காட்சி, முதல் முறையாக மாநில அரசு மற்றும் பிபிஎஸ் (PPAS)  செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை தவிர பள்ளி மாணவர்களுக்கு சில நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அவை எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், அதிர்ஷ்ட குலுக்கு, கதை மற்றும் கவிதை கூறும் போட்டி, சதுரங்க விளையாட்டு போன்றவையாகும். நிகழ்ச்சி தொடர்ந்து டிசம்பர் 11 வரை நடைபெறும்.


Pengarang :