NATIONAL

காவல்துறையினர் அக்டோபர் வரை போக்குவரத்து சம்மனாக RM49.6 மில்லியன் வசூலித்துள்ளது

கோலாலம்பூர், டிச 6; கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் RM49.6 மில்லியன் மதிப்பு தொகையைப் போக்குவரத்து சம்மன்களுக்கு நாடு முழுவதும் மொத்தம் 105,260 சாலைப் பயனாளிகள் செலுத்தியுள்ளனர்.

போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) நடவடிக்கையானது, ‘MyBayar Saman’ விண்ணப்பத்தின் மூலம் பணமில்லா மற்றும் டிஜிட்டல் சம்மன்கள் செலுத்தும் முறையை நடைமுறை படுத்தியதால், பொதுமக்களால் சம்மன் தொகைகளையை எளிதாக செலுத்த முடிந்துள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு JSPT க்கு வாழ்த்துக்கள், இது நாட்டின் டிஜிட்டல் மேம்பாட்டு முயற்சிகள் ஆதரிக்கிறது, “கூடுதலாக, ஜனவரி முதல் கடந்த அக்டோபர் வரையிலான பதிவுகளின் படி, நாடு முழுவதும் மொத்தம் 50 சதவீத சம்மன் தள்ளுபடி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, இதில் ரிம10.37 மில்லியன் சம்மன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

இன்று, புக்கிட் அமானில் ஏற்பாடு செய்த இன்ஸ்பெக்டர் ஜெனரலின் மாதாந்திர பேரவையுடன் இணைந்து அக்ரில் சானி இவ்வாறு கூறினார்.

– பெர்னாமா


Pengarang :