NATIONAL

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட மூன்று முதன்மைப் பணிகள்- அந்தோணி லோக் கோடி காட்டினார்

புத்ராஜெயா, டிச 6- பொது போக்குவரத்து இலக்கவியல் மய சேவைகளின் மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவை போக்குவரத்து அமைச்சு முன்னுரிமை அளிக்க உள்ள மூன்று முதன்மை பணிகள் அடங்கும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு கூடுதல் இரயில் சேவையை ஏற்படுத்துவது மீதும் கவனம் செலுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

எனினும், இரயில் பயணச் சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் எழுமா என்பதை அறிந்து கொள்ள பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்துடன் தாம் விவாதிக்க உள்ளதாக அவர் சொன்னார்.

பயணிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளை நேரில் கண்டறிவதற்காக நான் நேற்று எல்.ஆர்.டி. இரயில் பயணம் மேற்கொண்டேன். பயணச் சேவை நடத்துநர்களின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இரயில் சேவையை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளது என்று போக்குவரத்து அமைச்சில் தனது பணியைத் தொடக்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இலக்கவியல் மயமாக்கல் குறித்து கருத்துரைத்த அமைச்சர், தாம் முன்பு அமைச்சராக பதவியேற்றப் போது பதிவு எண் முறை உள்ளிட்டவற்றில் இலக்கவியலை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக விளக்கினார்.


Pengarang :