SELANGOR

கோல சிலாங்கூரில் இந்த சனிக்கிழமை வாகனப் பயன்பாடு இல்லா நாள்  

ஷா ஆலம், டிச 6: கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPKS) இந்த சனிக்கிழமை வாகனப் பயன்படு இல்லாத நாள் எனும் நிகழ்ச்சியுடன் இணைந்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

கோலா சிலாங்கூர் குறைந்த கார்பன் நகரம் என்ற நிகழ்வின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவும் அன்று காலை மணி 7.30க்கு டத்தாரன் மெலாவதியில் நடைபெறவுள்ளது.

“மிதிவண்டி ஓட்டுதல், ஏரோபிக்ஸ், இரவு ஓட்டம், நமது பூமியை பசுமையாக்குதல், மிக அழகான பாரம்பரிய உடை மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி போன்ற பிற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

“இரவு கலை மற்றும் கலாச்சாரம் நிகழ்ச்சியில் கலைஞர் சுரா பட்ரோனின் படைப்பு இடம்பெறும்,” என்று முகநூலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்குப் பொதுமக்கள், அசுவான் (019-2138091), அலி (017-2909138) அல்லது ரோஸ்லி (011-21307785) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்..


Pengarang :