NATIONAL

சிலாங்கூர் சுல்தானுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

ஷா ஆலம், டிச 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை இங்குள்ள இஸ்தானா காயாங்கானில் நேற்று சந்தித்தார்.

சுல்தானுக்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு தொடர்பான சில புகைப்படங்களைச் சிலாங்கூர் அரச அலுவலகம் நேற்றிரவு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதற்கு முன்னர், ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தார், பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா மற்றும் கிளந்தான் சுல்தான், சுல்தான் ஐந்தாவது முகமது ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் கடந்த மாதம் 24ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.


Pengarang :