NATIONAL

அன்வார்-இஸ்மாயில் சப்ரி சந்திப்பு- நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்

கோலாலம்பூர், டிச 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை நேற்று புத்ராஜெயாவில் சந்தித்தார்.

பெருமனதுடன் தம்மைச் சந்திக்க வந்தமைக்காக அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அன்வார் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு நடப்பு விவகாரங்கள் தொடர்பாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். எங்களுக்கு அவர் அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நான் நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன் என அவர் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ இஸ்மாயி சப்ரி யாக்கோப் போடு தாம் நடத்திய சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் அன்வார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் கடந்த மாதம் 24ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.


Pengarang :