NATIONAL

பொம்மை துப்பாக்கியைப் பயன்படுத்தி நகை கடையில் கொள்ளை 

ஷா ஆலம், டிச.7: ஈப்போவில் ஜாலான் சுல்தான் இஸ்கந்தரில் நேற்று மதியம் நகை கடையில் ஒன்றில் பொம்மை துப்பாக்கியைப் பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற நபரை அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒரு தங்கச் சங்கிலியை வாங்க விரும்புவதாக கூறியதாகவும், ஆனால் பின் அக்கடையில் வேலை செய்யும் நபரை நோக்கி ‘துப்பாக்கியை’ காட்டி அந்த தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும் ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது

பொதுமக்களால் துரத்தி செல்லப்பட்ட 32 வயது   சந்தேக நபர் குறித்து தகவல் பெற்ற பாசிர் பூத்தே காவல் நிலையத்தைச் சேர்ந்த இருவர் அந்த நபரைக் கண்டனர் என உதவி ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

” பண்டார் பாரு காவல் நிலையக் குழுவின் உதவியுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபர் வைத்திருந்த பிளாஸ்டிக் பொம்மை துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர்,” என்றார்.

சுமார் 30 நிமிடங்களில் இக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் பிடிக்கப்பட்டான். இதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு, காவல்துறையினரின் வேகமும் தான் காரணம் என்று யாஹாயா ஒப்புக்கொண்டார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 392/397யின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, சந்தேக நபர் இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் படுவார்.


Pengarang :