NATIONAL

அன்வார் வெ.1.5 கோடி  பெற்றாரா?   பெரிக்கத்தான் நேஷனல் அரசியலில் திவால் !

ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநிலப் பொருளாதார ஆலோசகராக பதவி
வகித்த காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு அலவன்ஸ்
அல்லது எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை.

மாறாக, அவர் சம்பளம் பெற்றதற்கு அடையாளமாக ஆண்டுக்கு ஒரு
வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது அந்த தொகையையும் அவர்
பெற்றுக் கொள்ளவில்லை.

சிலாங்கூர் மாநிலப் பொருளாதார ஆலோசகராகப் பதவி வகித்த போது
அன்வார் 1 கோடியே 50 லட்சம் வெள்ளியைக் கட்டணமாகப் பெற்றதாகக்
கூறப்பட்டது பொய்யான தகவலாகும் என்று சிலாங்கூர் மந்திரி
புசாரின் அரசியல் செயலாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பல முறை பதிலளிக்கப்பட்டு விட்டது.
மாநிலச் சட்டமன்றத்தில் கூட முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட்
இப்ராஹிம் இதன் தொடர்பில் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார் என்று
அவர் சொன்னார்.

டத்தோஸ்ரீ அன்வார் 1 கோடியே 50 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் பாடாங்
செராய் தேர்தல் பிரசாரத்தின் போது வெளியிட்ட தகவல் திரும்பத்
திரும்பச் சொல்லப்படும் பழைய ஆதாரமற்ற செய்தியாகும் என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்வி மற்றும்
பதில்களை உள்ளடக்கிய விபரக் குறிப்பில் (ஹான்சர்ட்) இந்த விஷயம்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜூவாய்ரியா சொன்னார்.

பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் இந்த நடவடிக்கை அக்கட்சி அரசியல்
மூலதனத்தை இழந்து விட்டதை காட்டுவதாக உள்ளது என்று அவர்
மேலும் தெரிவித்தார்.


Pengarang :