ALAM SEKITAR & CUACA

சுபாங் ஜெயாவில் வெள்ளத்தைச் சமாளிக்க  வெள்ளத் தடுப்பு பலப்படுத்தும் திட்டம்  தொடங்குகிறது

ஷா ஆலம், டிச 7: சுபாங் ஜெயாவில் உள்ள பெனாகா ஆற்றின் தடுப்பை வலுப்படுத்தும் திட்டம், RM2.3 மில்லியன் செலவில் அடுத்த ஆண்டு இடையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்தின் (ADN) உறுப்பினர் ஒருவர், இத்திட்டத்தின் மூலம் முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யுஎஸ்ஜே ஒன் அவென்யூ (USJ One Avenue) அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 2,000 பேர் பயனடைவார்கள் என்றார்.

மைக்கல் ஙா மேய் சேயை (Michelle Ng Mei Sze) தொடர்பு கொண்டபோது, “சுற்றுச்சுவரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதன் மூலம் குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.நீண்ட கால தீர்வான, ஆற்றின் தடுப்பைப் பலப்படுத்துவது, அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்படும் திட்டம்  குறித்து விளக்கமளிக்க அபார்ட்மென்ட் நிர்வாகத்துடன் தனது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

“யுஎஸ்ஜே ஒன் (USJ One)  அவென்யூவைத் தவிர, வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மற்ற இரண்டு பகுதிகள் ஜாலான் இண்டஸ்ட்ரி மற்றும் லகூன் பெர்டானா. இந்த இரண்டு பகுதிகளுக்கும் வெள்ளத்தை சமாளிக்க நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

யுஎஸ்ஜே ஒன் அவென்யூ 2012, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தை சந்தித்தது, இதன் விளைவாக நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்தன


Pengarang :