SELANGOR

மாநிலச் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 83,537 குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்

ஷா ஆலம், டிச 7: சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 83,537 குடியிருப்பாளர்கள் இல்திசம் சிலாங்கூர் சிஹாட் (ISS) திட்டத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் 405 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஆவணங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப் பட்டால், ஒவ்வொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படுவதற்கு 6 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்றார். “முழுமையடையாத விண்ணப்பங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் மற்றும் ஆவணப்படுத்துவதில் சிக்கல் இருந்தால் நாங்கள் பெறும் சில தகவல்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் நடந்த சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2023 இன் நிறைவு அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, இத்திட்டத்தில் இடம்பெற்றவர்கள் RM500 வரை அடிப்படை சிகிச்சை உதவியும், RM5,000 வரை காப்பீட்டுத் தொகையும், RM1,000 இறப்பு உதவியும் கிடைக்கும் என்று அமிருதீன் அறிவித்தார்.

கூடுதலாக, சிலாங்கூர் குடிமக்கள் சிறந்த பாதுகாப்பையும் பெறுவதற்கு மாநில அரசு தடுப்பூசிகளையும் வழங்குகிறது.

(ஐஎஸ்எஸ்) ISS என்பது தற்போது உள்ள காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்கும் மேம்படுத்தப்பட்ட பொது சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும்


Pengarang :