ECONOMY

வெள்ளத் தணிப்பு திட்டத்தை மறுபரிசீலனைச் செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டது நியாயம்தான் – டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

ஷா ஆலம், டிச.8: முந்தைய அரசாங்கத்தின் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒப்புதல் பெற்ற பிறகு, RM7 பில்லியன் வெள்ளத் தணிப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டது உண்மையில் நியாயமான ஒன்று தான் என்று டத்தோ மந்திரி புசார் கருதுகிறார்.

“அது தான் ஒப்புதலை மதிப்பாய்வு செய்யும் செயல்முறை ஆகும். டெண்டர் செயல்முறையை மறுஆய்வு செய்ய பிரதமர் விரும்புகிறார்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட RM4.7 பில்லியன் மதிப்பிலான சிலாங்கூரின் வெள்ளத் தணிப்பு ஒதுக்கீட்டை தொடர முடியும் என்று அவர் நம்புகிறார்.

“செயல்முறை திருத்தப்படலாம், ஆனால் சிலாங்கூருக்குத் அதற்கான தேவை உள்ளது குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் திட்டம் எங்களுக்கு மிகவும் அவசியம்,” என்கிறார்.

இன்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (எம்பிஎஸ்ஏ) சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022-யைப் பார்வையிட்டப் பிறகு செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர்.

நேற்று, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட RM7 பில்லியன் மதிப்பிலான வெள்ளத் தணிப்பு திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு இட்டார்.


Pengarang :