NATIONAL

தன்முனைப்பு பயிற்சி முகாமில் சித்திரவதை- ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசில் புகார்

கோலாலம்பூர், டிச 9- அண்மையில் செர்டாங்கில் நடைபெற்ற தன்முனைப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில் பெற்றோர்களிடமிருந்து நான்கு புகார்களை போலீசார் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இப்புகார்கள் கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்தியச் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.அன்பழகன், இதன் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த தன்முனைப்பு முகாமின் ஏற்பாட்டாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் எனக் கூறிய அவர், அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக விசாரணை அறிக்கை துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் அலுவலகத்திடம் சமர்பிக்கப்படும் என்றார்.

அரசு சாரா அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் 60 ஐந்தாண்டு ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டதாக இணைய ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிகவும் பலவீனமான நிலையிலும் அழுதவாறும் வீடு திரும்பிய அந்த மாணவர்கள் அந்த பயிற்சி முகாமில் தாங்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களால் மோசமாக நடத்தப்பட்டதாக பெற்றோர்களிடம்
தெரிவித்தனர்.


Pengarang :