HEALTH

ஒமிக்ரோன் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தடுப்பூசிக்கு எஃப்.டி.ஏ. அனுமதி

நியுயார்க், டிச 9- ஆறு மாதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாக்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு நிர்வாகம் (எஃப்.டி.ஏ.) அனுமதியளித்துள்ளது.

ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இந்த இருமுனை ஊக்கத் தடுப்பூசியை செலுத்த அனுமதிக்கப்படுவதாக எஃப்.டி.ஏ.வை மேற்கோள் காட்டி ஜெர்மனியின் டிபிஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

விடுமுறை மற்றும் குளிர்காலத்தின் போது சிறுவர்கள் அதிக நேரம் வீட்டில் இருப்பர் என்பதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து பெற்றோர்கள் பரிசீலிக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அந்த அமைப்பு தெரிவித்தது.

வைரஸ் தற்போது உருமாற்றம் கண்டுள்ளதால் கோவிட்-19 தடுப்பூசிகள் ஆகக் கடைசி மேம்பாடு மீதான மக்களின் விழிப்புணர்வு  தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு நன்மையைக் கொண்டு வரும் என எஃப்.டி.ஏ. ஆணையர் ரோபர்ட் எம். க்கிளிஃப்  கூறினார்.

நோய்த் தொற்று கடுமையாவது, மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் மரணங்கள் நேர்வதை இந்த தடுப்பூசித் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பைசர் மற்றும் மோடேர்னா நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருந்த தடுப்பூசிக்கு எஃப்.டி.ஏ. புதிய வழிகாட்டிகளுடன் அனுமதியளித்துள்ளது. இரண்டு டோஸ் மோடேர்னா தடுப்பூசியைப் பெற்ற சிறார்கள் இதனை மூன்றாவது ஊக்கத் தடுப்பூசியாகப் பெறலாம்.

ஊக்கத் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை இன்னும் பெறாத சிறார்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்கள் இந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு எஃப்.டி.ஏ. ஊக்குவிக்கவில்லை.


Pengarang :