ALAM SEKITAR & CUACA

கிளந்தான், திராங்கானுவில் நாளை வரை அபாய நிலை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 9: கிளந்தான் மற்றும் திராங்கானுவில் உள்ள பல மாவட்டங்களில் நாளை வரை கனமழை அபாயகரமான அளவில் தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலா கிராய் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யலாம் என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

திராங்கானுவில் பெசுட், செட்டியூ, குவாலா நெருஸ், உலு திராங்கானு, குவாலா திராங்கானு மற்றும் மராங் ஆகிய பகுதிகளும் இதை வானிலைதான் எதிர்நோக்கக்கூடும்.

பேராக்கில் (உலு பேராக்), கிளந்தான் (குவா முசாங்), திராங்கானு (டுங்குன், கெமாமன்) மற்றும் பகாங் (ஜெரான்டுட் மற்றும் குவாந்தன்) ஆகிய இடங்களிலும் கடுமையான மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (கெரியன், லாரூட், மாதாங், செலாமா, குவாலா கங்சார், மஞ்சோங், கின்தா, பேராக் தெங்கா, கம்பார்) மற்றும் பகாங் (கேமரன் மலை, லிபிஸ், மாறன், பெக்கான், ரொம்பின்) ஆகிய இடங்களில் அபயா நிலையில் தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, அவ்விடங்களில் 24 மணி நேரத்திற்குள் 150 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :