SELANGOR

இஸ்தானா புடாயா தியேட்டரில் கிள்ளான் வரலாற்றைக் காண 700 பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்

கோலாலம்பூர், டிச.9: சிலாங்கூர் நிர்வாகத்தின் முன்னோடி பகுதிகளில் ஒன்றான கிள்ளானின் வரலாறு இஸ்தானா புடாயாவில் உள்ள அந்தாரா திகா தியேட்டரில் நேற்று இரவு அரங்கேறியது. சுமார் 700 பார்வையாளர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் 1025 முதல் 1961 வரையிலான அம்மாவட்டத்தின் வரலாறு தனித்தன்மை வாய்ந்த மூன்று முக்கியக் கதையம்சத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சனிக்கிழமை வரை அதாவது மூன்று நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

டத்தோ மந்திரி புசார் மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமட், கலாச்சார எக்ஸ்கோ போர்ஹான் அமன் ஷா மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இதைக் கண்டுகளிக்க வந்திருந்தனர்.

இதுபோன்ற கதைகள் சிலாங்கூரின் வரலாற்றை அறிந்துகொள்ள இளைஞர்களிடத்தில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் www.ticket2u.com.my என்ற இணைத்தளத்தின் மூலம் RM20 விலையில் டிக்கெட்டுகளை பெறலாம்.


Pengarang :