SELANGOR

சிலாங்கூர் மாநிலம்  வரலாற்றுப் படைப்புகள் பலவற்றை உருவாக்கும்

கோலாலம்பூர், டிச.9: இளம் தலைமுறையினர் பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் சிலாங்கூர் வரலாற்றைக் கூறும் பல படைப்புகளை மாநில அரசு உருவாக்கிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான படைப்புகளை உருவாக்க நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில நிதி அதிகாரி டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அஹ்மட் தாஜுதீனுடன் அவர் கலந்துரையாடி உள்ளதாக கலை மற்றும் கலாச்சார  ஆட்சிக்குழு உறுப்பினர்  எஸ்கோ போர்ஹான் கூறினார்.

“அந்தரா திகா திரையரங்கம் சிலாங்கூரின் வரலாறு தொடர்பான படைப்புகளை உருவாக்கும் மாநில அரசின் முதல் திட்டமாகும்,“ என்றார்.

நேற்றிரவு இஸ்தானா புடாயாவில் நடந்த அன்டரா திகாவின் முதல் நாள்  காட்சியை கண்ட பின், “சிலாங்கூர், மாநிலம்  வரலாறு மிக்கது என்பதனை இப்படைப்புகள்  உணர்த்துவதாக கூறி பாராட்டினார்.

ஆர்வமுள்ள நபர்கள் https://www.ticket2u.com.my/event/29253 என்ற இணைப்பின் மூலம் RM20 விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.


Pengarang :