SELANGOR

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார விநியோகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் – டத்தோ மந்திரி புசார் தலைமையில்

ஷா ஆலம், டிச. 10: வேல்வோய்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Worlwide Holdings Berhad) மற்றும் டைனாக் எஸ்டிஎன் பிஎச்டி (Dynac Sdn. Bhd) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் தலைமையில் நடந்தது.

சுத்தமான எரிபொருள் மற்றும் பசுமை தொழில்நுட்ப தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் சைபர் ஜெயாவிற்கான மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் சிறிய அளவிலான மின் உற்பத்தி திட்டங்களின் வளர்ச்சி மற்றும் சைபர் ஜெயாவிற்கான புதிய ஆற்றல் திட்டங்களை செயல்படுத்தும்.

ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் மூன்று முக்கிய நோக்கங்களான வாழ்வின் தன்மை, பொருளாதார உற்பத்தி திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடுவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்வோய்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுகா நோராஸ்லினா ஜகாரியாவும் அதே நேரத்தில் டைனாக் எஸ்டிஎன் பிஎச்டி தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ எம்டி ஜஸ்மான் பொங்கேக்கும் (Datuk Md Jasman Bongkek), அவ்விரண்டு நிர்வாகத்தின் பிரதிநிதிகள் ஆவர்.


Pengarang :