SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி வெளிநாட்டவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷா ஆலம், டிச 10: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 உள்ளூர் மக்களின் கவனத்தை மட்டுமல்லாமல், நம் நாட்டில் வசிக்கும் வெளி நாட்டினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆசிரியராகப் பணிபுரியும் 35 வயதான தாஹிரா ஜமீல், சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றதில் உற்சாகமாக இருக்கிறார், ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சி தனது சொந்த நாட்டில் அதிகம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றார்.

“பாகிஸ்தானில் இதுபோன்ற கண்காட்சிகள் பெரிய நகரங்களில் மட்டுமே ஏற்பாடு செய்யப்படுகின்றன மற்றும் புத்தகங்கள் மிகவும் விலை உயர்வாக விற்கப்படுகின்றன என்றார்.

“மலேசியர்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் அவர்கள் புத்தகங்களை வாங்காவிட்டாலும் இலவசமாக வழங்கப்படும் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும்,” என்று அவர் கூறினார்,

36 வயதான மைசூரா மியோர் அரிவின், மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டப் புத்தகக் கண்காட்சிக்குத் தன் மகனை அழைத்து வர பள்ளியின் கடைசி நாளைப் பயன்படுத்திக் கொண்டார்.

மருத்துவமனை உதவியாளர் கைருல் அப்த் ரஷீத் (50) தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்துள்ளார்.

“பரந்த அளவிலான புத்தகங்கள் உள்ளன. உண்மையில், குடும்பங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்படவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர் ஹெமி அனெரினா ஹாஜா மைடின் (36), தனது புத்தகச் சேகரிப்பில் மேலும் புத்தகங்களைச் சேர்க்க இக்கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளார். குழந்தை பருவத்திலிருந்தே மக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும், என்றார்.


Pengarang :