SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து- விசாரணை அறிக்கையைச் சிலாங்கூர் அரசு ஆராயும்

ஷா ஆலம், டிச 11- ஏழு பயணிகள் காயமடைவதற்கு காரணமாக ஸ்மார்ட்
சிலாங்கூர் பஸ் விபத்து தொடர்பான அறிக்கையை மாநில அரசு விரிவாக
ஆராயவிருக்கிறது.

மாநில அரசின் அந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்தும்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்கள் மற்றும் போக்குவரத்து
துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகப் பகுதியில் சேவையில்
ஈடுபட்டிருந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் ஒன்று ஜாலான் கோல
சிலாங்கூர், பத்து 16, சுங்கை பாலோங்கில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45
மணியளவில் விபத்துக்குள்ளானது தொடர்பில் அவர் இவ்வாறு
கருத்துரைத்தார்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் குறிப்பாக ஸ்மார்ட் சிலாங்கூர்
சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பில் மாநில அதிகம்
கவனம் செலுத்தி வருகிறது. அந்த விபத்து தொடர்பான அறிக்கை
கிடைத்தவுடன் இதன் தொடர்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்
என அவர் சொன்னார்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு சிறார்கள் உள்பட எழு பயணிகளும்
சிகிச்சைக்காகச் சுங்கை பூலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டதாகவும் இங் தெரிவித்தார்.


Pengarang :