SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்குச் சுமார் 200,000 அதிகமானோர் வருகை புரிந்தனர்

ஷா ஆலம், டிச 12: 11 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 நேற்று முடிவடைந்தது,  இந்நிகழ்வுக்கு சுமார் 200,000க்கும் அதிகமான வருகையாளர்கள் வந்தனர்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் இறுதி நாள் வரை, மொத்த விற்பனையின் மதிப்பு 5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சிலாங்கூர் பொது நூலகக் கூட்டுத்தாபனத்தின் (PPAS) இயக்குனர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட SIBF 2022, வருடாந்திர மாநில அரசாங்க நிகழ்வாக நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கூறினார்.

“அடுத்த வருடம் அதே தேதியில் அதே இடத்தில் ஏற்பாடு செய்வோம். இதற்குப் பிறகு நாங்கள் இந்நிகழ்வை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மேம்படுத்துவோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள்  சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியை சர்வதேச அளவில் மேம்படுத்த விரும்பியதன் காரணமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

“இதுவரை SIBF 2022 இல் பங்கெடுத்த எட்டு நாடுகளைச் சேர்ந்த சர்வதேசக் கண்காட்சி யாளர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் பெற்றுள்ளோம்.

“அடுத்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து அதிகமான கண்காட்சியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :