SELANGOR

ஆயுட்காலத்தை அதிகரிக்க முதியோர் மேம்பாட்டு திட்டம்

கோம்பாக், டிச 13: சிலாங்கூர் அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

65 வயது முதல் 78 வயது வரை உள்ளவர்களின், குறிப்பாக பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி,  கூறினார்.

“எனவே அத்தரப்பினருக்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி போன்று முதியோருக்கான மையத்தின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும்,“.

“சில ஐரோப்பிய நாடுகளில், முதியோர்களுக்கான மையங்கள் மழலையர் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, இதனால் வயதானவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளலாம். எனவே இதுவும் மேற்கொள்ள நினைக்கும் திட்டத்தில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

உலு  கிள்லாங்கில் உள்ள டேசா பெண்டிடிக் கெரமாட் பெர்மாய் AU1C இல் வசிப்பவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் போது பேசிய கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் சிலாங்கூரின் குறைவான பிறப்பு விகிதம் குறித்து கவலைப் பட்டார்.

“ஒரு குடும்பத்திற்குப் பிறப்பு விகிதம் உண்மையில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. “ஆனால் வயதானவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் உள்ளது, இது நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :