SELANGOR

சுங்கை காண்டீஸ் உறுப்பினரின் முயற்சியால் பழுதடைந்த சாலை விரைந்து சீர் செய்யப்பட்டது

ஷா ஆலம், டிச 13- ரிம்பாயுவிலிருந்து கோத்தா கெமுனிங் மற்றும்
ஜாலான் கெபுன் செல்லும் சாலையின் மையப் பகுதியில் ஏற்பட்ட பெரிய
பள்ளம் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது
முக்னியின் முயற்சியால் விரைந்து சீர் செய்யப்பட்டது.

சாலையில் ஏற்பட்ட குழிகள் தொடர்பில் வாகனமோட்டிகளிடமிருந்து தாம்
புகார்களைப் பெற்றதாக ஜவாவி கூறினார். வாகனமோட்டிகளின் உயிருக்கு
ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த குழிகள் பெரியதாக இருந்ததோடு
அதில் மோதியதால் பல வாகனங்களின் சக்கரங்களும் சேதமடைந்தன
என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட இடத்தைச் சோதனையிட்ட போது அது கோத்தா கெமுனிங்
தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் உள்ளது தெரிய வந்தது. எனினும், நான்
உடனடியாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தைத் தொடர்பு கொண்டு
சாலையில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும்படி கேட்டுக் கொண்டேன் என்று
மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இப்புகாரைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாநகர்
மன்றத் தரப்பினர் அச்சாலையில் காணப்பட்ட குழிகளை மூடி சீரான
போக்குவரத்துக்கு வழி வகுத்தனர் என்றார் அவர்.


Pengarang :