HEALTHSELANGOR

இந்த சனிக்கிழமை புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்றத்தில் இலவச நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன

ஷா ஆலம், டிச.13: புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் இலவச நிமோகாக்கல் மற்றும் இன்புளுயன்சா தடுப்பூசிகளை டிசம்பர் 17-ஆம் தேதி பெற வாய்ப்பு உள்ளது.

பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் பல்நோக்கு மண்டபத்தில் (MBPJ), ஜாலான் 51A/227, காலை மணி 10 முதல் மதியம் மணி 2 வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மொத்தம் 250 டோஸ் நிமோகாக்கல் தடுப்பூசியும், 250 டோஸ் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியும் உள்ளன என்று பிரதிநிதி ராஜீவ் ரிஷ்யகாரன் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு பட்ஜெட்டில், சிலாங்கூர் அரசாங்கம் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தது மற்றும் முதியோர்களை இலக்காகக் கொண்டு நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளில் கவனம் செலுத்தியது, ஏனெனில் அவர்கள் மிகவும் எளிதாக பாதிக்கப்படக் கூடிய குழுவாகும்.

“தடுப்பூசியைப் பெற நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைத் தெரிந்து கொள்ள உங்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

ராஜீவின் கூற்றுப்படி, தடுப்பூசியைப் பெறத் தகுதி பெறுவதற்கு முன்பு ஒரு மருத்துவரின் சுருக்கமான மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். “உங்களைப் பரிசோதனை செய்யும் மருத்துவரிடம் நீங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.

நவம்பர் 10 அன்று, டத்தோ மந்திரி புசார் 10,000 டோஸ் இலவச தடுப்பூசிகள் (5,000 டோஸ் நிமோகாக்கல் தடுப்பூசி, 5,000 டோஸ் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி) வழங்குவதற்காக RM1.5 மில்லியன் நிதியை அறிவித்தார்.

நவம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை முதல் கட்டமாக முதியவர்கள் அதாவது 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 5,000 பேரை இலக்காகக் கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :