SELANGOR

சிலாங்கூரில் 2,100 புதிய வைஃபை சேவை மையங்கள்

ஷா ஆலம், டிச.13: தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சியை கிராமத்தில் உள்ள மக்கள் உணரும் வகையில் மொத்தம் 2,100 புதிய வைஃபை சேவை மையங்கள் அடுத்த ஆண்டு உருவாக்கப்படும்.

5.93 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச வைஃபை 2015யில் அறிமுகப்படுத்தப் பட்டாலும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிடையே டிஜிட்டல் வேறுபாடு இன்னும் உள்ளது.

“2023யில் சிலாங்கூரில் RM5.93 மில்லியன் ஒதுக்கீட்டில் 2,100 புதிய வைஃபை சேவை மையங்கள் உருவாக்கப்படும்.  இதன் மூலம் கிராமத்தில் உள்ள மக்கள் தொழில் நுட்பத்தின் தற்போதைய நிலையை உணர முடியும்,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமிருடின், அடுத்த ஆண்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் வகையில் 373 பாரம்பரிய கிராமங்கள் வைஃபை சேவைகளை பெறும் என்றார்.

கிராமப்புறங்களுக்கான சிறப்பு இலவச வைஃபை திட்டத்தின் மூலம், பொது மண்டபங்கள், சமூக மையங்கள், மசூதிகள் மற்றும் சுராவ் ஆகிய இடங்களுக்கு இணைய அணுகலை விரிவுபடுத்துதலின் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை  குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Pengarang :