HEALTH

இந்த சனிக்கிழமை சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்  தொகுதியில்  இலவச நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் 

ஷா ஆலம், டிச 13: சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சனிக்கிழமை இலவச இன்ஃப்ளூயென்ஸா மற்றும் நிமோகாக்கல் தடுப்பூசி களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) கூறுகையில், ஜெகெபி (JKP) சமூக மையம் பகுதி 4 US1 மண்டபத்தில் காலை மணி 10 முதல் மாலை மணி 4 வரை 1,000 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும்.

“தடுப்பூசி குறைவாக இருப்பதால் மூத்தக் குடிமக்களை முதலில் https://bit.ly/sj_vaccineயில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

“தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் குறுஞ்செய்தி (SMS) மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பெறுவார்கள்,“ என மிஷல் இங் மேய் ஸி சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

முதியவர்கள் வரிசையில் நிற்பதையும், அதிக நேரம் காத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் ஐந்து கட்டமாகப் பிரிக்கப் பட்டுள்ளது,   இதன் மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மிஷல் இங்  கூறினார்.


Pengarang :