SELANGOR

சிலாங்கூர் அரசின் மின்-வாடிக்கையாளர் தினம் நாளை நடைபெறும்

ஷா ஆலம், டிச 14- மின்-வாடிக்கையாளர் தினத்தை மாநில அரசு அலுவலகம் (எஸ்.யு.கே.) நாளை வியாழக்கிழமை நடத்தவுள்ளது. 

அரசு நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பு  ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இணையம் வாயிலாக நடைபெறும்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் புகார்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான தங்களின் பரிந்துரைகளை முன்வைக்கலாம்.

அன்னையர் பரிவுத் திட்டம், சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்), சிலாங்கூர் இலவச குடிநீர் விநியோகத் திட்டம், சிலாங்கூர் சட்ட உதவி நிதித் திட்டம், மூத்த குடிமக்கள் நட்புறவு உதவித் திட்டம், பெருநாள் கால பற்றுச்சீட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துகளை பொது மக்கள் வழங்கலாம். 

மேல் விபரங்களுக்கு  https://epelanggan.selangor.gov.my/
 அல்லது [email protected] என்ற அகப்பக்கம்  வாயிலாக அல்லது 03-55447000 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Pengarang :