SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 60 பேருக்குக் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் அன்பளிப்பு

கிள்ளான், டிச 14- கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இரு ஆதரவற்றோர்
இல்லங்களைச் சேர்ந்த 60 சிறார்களுக்குச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

வாஜா ஹோம்ஸ் மற்றும் லுதரன் சகோதர வீடு ஆகிய இரு
ஆதரவற்றோர் இல்லங்களையும் சேர்ந்த அந்த சிறார்களுக்குத் தங்களுக்குப்
பிடித்தமான உடைகளைச் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
வழங்கப்பட்டதாக குணராஜ் தெரிவித்தார்.

இச்சிறார்கள் மத்தியில் தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வைப்
போக்கி அவர்களை ஆதரித்து அரவணைக்கும் நோக்கிலும் கிறிஸ்துமஸ்
குதூகலத்தில் அவர்களையும் பங்கு பெறச் செய்யவும் இந்த ஏற்பாடு
செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நாளை 15ஆம் தேதி நடைபெறும் இரவு
நடைபெறும் விருந்து நிகழ்வில் மேலும் மூன்று ஆதரவற்றோர்
இல்லங்களைச் சேர்ந்த 100 சிறார்களைக் கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும்
அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த சிறார்களின் நலனில்
தொகுதி சேவை மையம் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் என்றும்
அவர் சொன்னார்.


Pengarang :