SELANGOR

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காகப் பயனற்ற, பழையப்  பொருட்களை  அப்புறப்படுத்த ரோரோ வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது – எம்பிஎச்எஸ்

ஷா ஆலம், டிச. 14: கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக பயனற்ற பழைய க்கழிவுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எளிமையாக்க குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) தொட்டிகளை வழங்குகிறது.

இந்த இலவச சேவை டிசம்பர் 12 முதல் 23 வரை நிர்வாகப் பகுதியில் தொடங்கியது என்று உள்ளூர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பழைய மரச்சாமான்கள், அலமாரிகள், சோபாக்கள், மெத்தைகள், படுக்கைகள், குளிர்சாதனப் பெட்டிகள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், பேட்டரி சார்ஜர்கள், கைப்பேசிகள் மற்றும் பல மின்சாதனப் பொருள்களை மக்கள் எளிதாக அப்புறப்படுத்துவதற்காக இந்த ரோரோ தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“உலு சிலாங்கூர் சுற்றியுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று டன் கொள்ளளவு கொண்ட ரோரோ எட்டு நாட்களுக்கு வழங்கப்படுகின்றன,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுக் கழிவுகள் அல்லது சமையலறைக் கழிவுகள் போன்றவை ரோரோ தொட்டிகளில் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என எம்பிஎச்எஸ் தெரிவித்துள்ளது. ரோரோவின் சேவை தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், எம்பிஎச்எஸ் (MPHS) திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் துறையை 03-6064 1331 அல்லது 03-6064 1050 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :