NATIONAL

மன உளைச்சலா? சேஹாட் தொலைபேசி சேவையை விரைந்து நாடுங்கள்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 15- மன உளைச்சல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்
சிலாங்கூர் மெண்டல் சேஹாட் (சேஹாட்) தொலைபேசி சேவையின்
வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களுடன் தங்கள் மன
உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காக போதைப் பொருள், மது அல்லது
நுகரும் போதை வஸ்துகள் பக்கம் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து
இத்தகைய ஆலோகர்களின் உதவியை அவர்கள் நாட வேண்டும் என்று
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி
மரியா மாமுட் கூறினார்.

மனதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரச்சனைகளிலிருந்து மனதைத் திசை
திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்படும் இத்தகையப் போதைப் பொருள்கள்
தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும்
அவர் எச்சரித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட ஆலோகர்களுடன் கலந்துறவாடுவதன் மூலம் உங்கள்
உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள் என தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்
தெரிவித்தார்.

சேஹாட் ஆலோசனைச் சேவையைப் பெற விரும்புவோர் 1700-82-7536
அல்லது 1700-82-7537 என்ற எண்கள் மற்றும் செலங்கா செயலி
வாயிலாகவும் www.drsitimariah.com/sehat என்ற அகப்பக்கம் மூலமாகவும்
தொடர்பு கொள்ளலாம்.

கடந்த ஜூன் மாதம் இந்த சேவை தொடங்கப்பட்டது முதல் இதுவரை
300க்கும் மேற்பட்டோர் சேஹாட் ஆலோசகர்களைத் தொடர் கொண்டு
உதவி பெற்றுள்ளனர்.


Pengarang :