ECONOMYSELANGOR

சாலைகளை மேம்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு RM145 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 15: அடுத்த ஆண்டு சிலாங்கூரில் சாலைகளின் அமைப்பை மேம்படுத்த மாநில அரசு RM145 மில்லியன் நிதியை வழங்குகிறது.

புதிய சாலைகள் அமைப்பது மற்றும் அதிகரித்து வரும் பயனர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது இத்திட்டம் என்று டத்தோ மந்திரி புசார்.

“இந்த ஏற்பாடு மாநிலத்தின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் நலனுக்காக சாலை அமைப்பின் இணைப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் கூறினார்.

அவரது கூற்றுப்படி, கம்போங் ஸ்ரீ இண்டா ஏ முதல் சுங்கை பூலோ மருத்துவமனை வரை புதிய சாலைகள் அமைக்க பொதுப்பணித் துறைக்கு மொத்தம் 40.98 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

மற்றொரு சாலையானது சுங்கை கிளம்பு-கெந்திங் சன்யென் மற்றும் கம்பங் உலு சுச்சுவை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துடன் (KLIA) இணைக்கிறது, இது தற்போது கட்டுமானத்தில் உள்ளது.

பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தல் திட்டங்கள் பின்வருமாறு:

– ஜாலான் புக்கிட் ரிமாவ் (RM12.5 மில்லியன்)

– ஜாலான் சிம்பாங் திகா ஜாலான் ரஹிடின், ஷா ஆலம் (RM4.7 மில்லியன்)

– ஜாலான் ரெகோ, உலு லங்காட் (RM1.7 மில்லியன்)

– கம்போங் புக்கிட் டுகாங் சாலை சந்திப்பு, சிப்பாங் (RM1.7 மில்லியன்)

– திராம் ஜெயா தேசிய இடைநிலைப்பள்ளி, கோலா சிலாங்கூர் (RM3.2 மில்லியன்)

– ஜாலான் சுங்கை பஞ்சாங், ஜாலான் கோலா சிலாங்கூர்-தெலுக் இந்தான் சந்திப்பிலிருந்து

   பாரிட்  அம்பட் தைமூர் வரை (RM2.3 மில்லியன்)

– பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், (RM11.8 மில்லியன்)

– தெரு விளக்குகளை நிறுவுதல் (RM3 மில்லியன்)

– மாநிலச் சாலை  அரசு பதிவேட்டில்  பதிவு (RM1.5 மில்லியன்)

– மாநில வழி அரசு பதிவேட்டில்  பதிவு (RM2 மில்லியன்)

– சிலாங்கூர் அரண்மனை (RM6.3 மில்லியன்) உட்பட கட்டிடங்களைக் கட்டவும் மேம்படுத்தவும்

-பல்வேறு கட்டிடத் திட்டங்கள் (RM1.5 மில்லியன்)


Pengarang :