ECONOMYSELANGOR

மலிவு விற்பனை- பொருள்களை வாங்க பொதுமக்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்

பெட்டாலிங், டிச 15– இன்று நடைபெற்ற கின்ராரா தொகுதி நிலையிலான
ஜெலாஜா ஏசான் ராக்யாட் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைத்
திட்டத்திற்குப் பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது.

இங்குள்ள தாமான் புஞ்சா ஜாலில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டருந்த
இந்த மலிவு விற்பனையில் கலந்து பொருள்களை வாங்குவதற்காக மக்கள்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர்.

இதற்கு முன்னர் மூன்று நடைபெற்ற இத்தகைய மலிவு விற்பனையில்
தாம் வாங்கவிருந்த சமையல் பொருள்கள் தமது முறை வருவதற்கு
முன்பாகவே முடிந்து விட்டதாக இந்த விற்பனையில் கலந்து கொண்ட
பொது மக்களில் ஒருவரான ஃபாத்தின் கைருனிசா மன்சோர் (வயது 28)
கூறினார்.

கடந்த மூன்று முறையும் நாம் தாமதமாக சென்றதால் பொருள்களை
வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இம்முறையும் ஏமாறக் கூடாது
என்பதற்காக காலை 8.00 மணிக்கு வரிசையில் காத்திருக்கத்
தொடங்கினேன் என்று அவர் சொன்னார்.

இந்த விற்பனையில் கோழி, முட்டை, மீன், அரிசி, இறைச்சி, போன்ற
பொருள்களை வெறும் 70 வெள்ளிக்கே வாங்க முடிந்தது குறித்து நான்
பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

தம்மைப் போல் உடல் நலிவுற்றவர்களுக்காகப் பிரத்தியேக வரிசை
ஏற்படுத்தப்பட்டிருந்த து பொருள்களை வாங்கும் பணியை எளிதாக்கியதாக
ரோபியா ரஹ்மாட் (வயது 57) எனும் மாது கூறினார்.

காலில் அறுவை சிகிச்சை செய்திருந்த எனக்கு நாற்காலி
வழங்கப்பட்டதோடு வரிசையில் விரைவாக செல்லவும் வாய்ப்பு
வழங்கப்பட்டது, இந்த விற்பனையில் 100 வெள்ளிக்கும் குறைவான
விலையில் 10 பொருள்களை வாங்கினேன் என்றார் அவர்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 1 கோடி
வெள்ளி முதல் 1.5 கோடி வெள்ளி வரை ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த
13ஆம் தேதி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :