NATIONAL

நிலச்சரிவு தளங்களில் தீயணைப்பு வீரர்கள் மூன்று தரை அசைவு கண்டறிதல் கருவிகளை நிறுவினர்

பத்தாங் காலி, டிச 17: நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கண்காணிக்க இங்குள்ள கோத் தோங் ஜெயாவில் தரை அசைவு கண்டறிதல்  கருவியை  நிறுவியுள்ளது சிலாங்கூரின் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்).

கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையுடன் (ஜேஎம்ஜி) இணைந்து, இடிபாடுகளின் நிலை இன்னும் புதிதாக இருப்பதால், நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடிய மழைக்காலம்  என்பதை கருத்தில் கொண்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று இடங்களில் அந்த உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார் அதன் இயக்குனர் டத்தோ நோராஸாம் காமிஸ்,

“கண்காணிப்பின் அடிப்படையில் தரையில் எந்த அசைவும் இல்லை, ஆனால் இடிபாடுகள் நிறைந்த இந்த பகுதியில் இன்னும் நீர் ஓட்டம் உள்ளது. மென்மையான மண் மற்றும் நிலத்தடி நீர் ஓட்டம் ஆகியவை நிலச்சரிவை ஏற்படுத்தலாம்.

“தேடல் மற்றும் மீட்பு (SAR) பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் சம்பவம் இடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கனமழை காரணமாக நேற்று நள்ளிரவு ஒத்திவைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை, இரண்டாம் நாள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.


Pengarang :