ECONOMYNATIONAL

மக்கள் ரொக்க உதவித் திட்டம் தொடரும்- 90 லட்சம் பேருக்கு ஜனவரியில் நிதி பகிர்ந்தளிக்கப்படும்

ஷா ஆலம் டிச 20- முன்பு அமலில் இருந்த மக்கள் ரொக்க உதவித் திட்டம் தொடரும் என்பதோடு அந்த திட்டத்தின் கீழ் நிதி பகிர்ந்தளிப்பு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வழக்கமாக மார்ச் மாதம் வழங்கப்படும் இந்த உதவித் தொகை மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இம்முறை ஜனவரி மாதமே வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
விவசாயிகள், மீனவர்கள், சிறு தோட்டக்காரர்கள் மற்றும் கிளந்தான், திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ரொக்க உதவி நிதி பகிர்ந்தளிப்பு விரைவுபடுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவர்களுக்கு 300 வெள்ளியும் திருமணமாகாதவர்களுக்கு 100 வெள்ளியும் வழங்கப்படும். சுமார் 90 லட்சம் பேர் பயனடையக்கூடிய இத்திட்டத்திற்காக 200 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :