ALAM SEKITAR & CUACAANTARABANGSA

தென் தாய்லாந்தில் வெள்ளம்- 64,000 பேர் பாதிப்பு

பேங்காக், டிச 21- அண்மைய சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக தாய்லாந்தின் ஒன்பது பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய வேளையில் 64,000 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சுராட் தானி,
நிக்கோன் சி தாமாராட், ட்ராங், பத்தாலுங், சாத்துன், சொங்க்லா, பத்தாணி,
யாலா, நராதிவாட், ஆகிய ஒன்பது பிரதேசங்களில் உள்ள 66 மாவட்டங்கள்
பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன என்று அந்நாட்டின் பேரிடர் தடுப்புத் துறை
கூறியது.

வலுவான வடகிழக்கு பருவக்காற்று தாய்லாந்து வளைகுடா மற்றும்
அந்தமான் கடல் பகுதியைக் கடக்கும் காரணத்தால் கடுமையான மழை
பெய்து வருவதோடு ஆறுகளில் நீர்ப் பெருக்கெடுத்து பல பகுதிகளில்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அது தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒன்பது பிரதேசங்களில் ஏற்பட்ட
வெள்ளத்தால் 1,425 கிராமங்களைச் சேர்ந்த 64,626 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அத்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டப் பல இடங்களில் தற்போது வெள்ளம் வடியத்
தொடங்கியுள்ள நிலையில் துப்புரவுப் பணிகளை ஒருங்கிணைக்கும்
நடவடிக்கையில் அத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


Pengarang :