SELANGOR

சிலாங்கூரில் மக்கள்  ஒற்றுமைக்கு  எடுத்துக்காட்டாக பல்வேறு சமய  வழிபாட்டு இல்லங்கள் விளங்குகின்றன.

கோலா சிலாங்கூர், டிச 21: சிலாங்கூர் மக்களிடையே  மிக உயர்ந்த சகிப்புத்தன்மையை  நிலவுவதை  உணர்த்தும் வண்ணம் உள்ளது,  கோலா சிலாங்கூர் புக்கிட் ரோத்தானில் மசூதி, தேவாலயம் மற்றும் கோவில்  ஒரே இடத்தில்  செயல்படுவது. மக்களிடையே   பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் மத வேறுபாடுகள் இருந்தாலும் அது,  ஒற்றுமையை எவ்விதத்திலும் பலவீனப்படுத்த வில்லை.

கோலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தானில் 96 ஆண்டுகளுக்கும் மேலாக அந்-நூரியா மசூதி, தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் ஸ்ரீ சக்தி  ஆலயம்  அருகருகே இயங்கி வருகின்றன. பிரதான சாலையின் ஓரத்தில் 200 மீட்டர் பரப்பளவில் இந்த மூன்று கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

வரலாற்றின் படி, ஸ்ரீ சக்தி  ஆலயம்  முதலில் கட்டப்பட்டது அது 110 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விரிவாக்கப் பணியைத் தொடர்ந்து 2013 யில் அருகில் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. அன்-நுரியா மசூதியும் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயமும் 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டன.

சமீபகாலமாக பல இடங்களில் மத வேறுபாடுகள் குறித்து எதிர்மறை குரல்கள் அதிகமாக வந்தாலும், புக்கிட் ரோத்தான் குடியிருப்பாளர்களின் ஒருமித்த கருத்தை அது ஒருபோதும் பாதிக்கவில்லை.

மேலும், அவர்கள் அதிக சகிப்புத்தன்மையுடன் இருப்பதால் அம்மூன்று வழிபாட்டு தளங்களும் எப்போதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.


Pengarang :