ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

ஷா ஆலம், டிச 21: வடகிழக்கு பருவமழையால் 5 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி, சுமார் 72,583 பேர் 444 தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தான் மற்றும் திரங்கானு வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்று சமூக நலப் பேரிடர் தகவல் துறை தெரிவித்துள்ளது.

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,037 குடும்பங்களைச் சேர்ந்த 31,411 பேர் 139 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் திரங்கானுவில் 298 மையங்களில் 11,361 குடும்பங்களைச் சேர்ந்த 40,849 பேர் உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்கள், பகாங் (221 பேர்), ஜோகூர் (48 பேர்) மற்றும் பேராக் (54 பேர்) ஆகும்.

இதற்கிடையில், இன்று முழுவதும் கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் மாநிலங்களில் மழை பெய்யும் என மெட்மலேசியா கணித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பிற்பகலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :