NATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டம் தொடரும்- செலவினம் 1,101 கோடி வெள்ளியாகக் குறைக்கப்படும்

கோலாலம்பூர், டிச 21- கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டத்தை அரசாங்கம் தொடரும். எனினும், அதற்கான செலவினம் 1,101 கோடி வெள்ளியாக குறைக்கப்படும்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்ட போது அதன் ஒட்டுமொத்த மதிப்பு 8,597 கோடி வெள்ளியாக இருந்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

புதிய தடங்கள் விரிவாக்கம் மற்றும் பழைய ஒப்பந்தங்களுக்கு இன்னும்
கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்திற்கான செலவு அதிகரித்தப் போதிலும் இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தின் ஒட்டுமொத்தச் செலவு முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விடமிகவும் குறைந்துள்ளதாக என அவர் தெரிவித்தார்.

இ.சி.ஆர்.எல். திட்டத்திற்கான வழித்தடம் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் செலவினத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டாலும் இதன் காரணமாக ஒட்டுமொத்தச் செலவுத் தொகையை 1,101 கோடி வெள்ளியாகக் குறைக்க முடிந்த து என்றார் அவர்.

அமலாக்கத்தில் தாமதத்தையும் நடப்பு பேச்சு வார்த்தைகளில் சிக்கலையும் ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டத் திட்டங்களைத் தொடர்வது என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரயில் திட்டத்திற்கான செலவினத்தை கடந்த 2016ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட வெகுவாகக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை விரைவாக முடிப்பதில் உதவிய நிதியமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.


Pengarang :