NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் உறுதியாக உள்ளனர்

பத்தாங் காலி, டிச 21: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தின் தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) உறுப்பினர்கள், ஐந்தாவது நாளாக தேடுதல் பணியை மேற்கொள்வதில் சோர்வடைய வில்லை.

உறுப்பினர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்ட போதும் சிலர் தேடும் இடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர் என சிலாங்கூர் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்க இயக்குநர் ஹபிஷாம் முகமட் நூர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் காணாமல் போன நபர்களை கண்டுபிடிப்பதில் தங்களின் உறுதியைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், தேடுதல் குழுவின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அவர்கள் தேடுதல் பணியை தொடர போதுமான ஓய்வு பெற வேண்டும் என்றும் ஹபிஷாம் கூறினார்.

தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையை தவிர, தேசிய பாதுகாப்பு மலேசிய ஆயுதப் படைகள், மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் மலேசியச் சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழு ஆகியவையும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Pengarang :