NATIONAL

டத்தாரன் மெர்டேகாவில் நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது – பிரதமர்

புத்ராஜெயா, டிச 21: பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால், 2023-ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று டத்தாரன் மெர்டேகா வில் நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர், “வெள்ளச் சூழல் மற்றும் மக்களின் சிரமம் காரணமாக, டிசம்பர் 31-ஆம் தேதி டத்தாரன் மெர்டேகா வில் நடைபெறும் பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு விவகாரம் குறித்து கவனம் செலுத்தியதாகவும், இன்று மாலை அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக தாமே கிளந்தனுக்குச் செல்வதாகவும் பிரதமர் கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அவர்கள் இரு மாநிலங்களுக்கு சென்று கண்காணித்து சில உடனடி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் அதைப் பற்றி அறிக்கையும் அளித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :