ECONOMYNATIONAL

தென்கிழக்கு ஆசியாவின் முதல் உலகச் சூப்பர் ஹீரோ கண்காட்சியின் தொகுப்பாளராகச் சிலாங்கூர் தேர்வு

பெட்டாலிங் ஜெயா, டிச 22: தென்கிழக்கு ஆசியாவின் முதல் உலகச் சூப்பர் ஹீரோ கண்காட்சியின் தொகுப்பாளராகச் சிலாங்கூர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு வசதிகளின் தரம் மற்றும் திறன் ஆகியவை காரணிகளாக இருந்தன.

வசதிகள் மற்றும் நல்ல போக்குவரத்து வடிவமைப்பு ஆகியவை தி வேர்ல்ட் ஆஃப் டிசி கண்காட்சிக்குப் பார்வையாளர்களை ஈர்க்கும் என வாவ் இவன்ட் ஆசியா (WOW Event Asia) தரப்பினரை நம்பவைத்துள்ளது என்றார் டத்தோ மந்திரி புசார்.

நாளை துவங்கும் கண்காட்சி அடுத்த ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறும். இதன்வழி, உள்நாட்டு சுற்றுலா, குறிப்பாக சில்லறை வணிகம் மற்றும் தங்கும் விடுதி வணிகத்திற்கு நன்மை பயக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

“இது ஆசியாவிலேயே முதல்முறை நடத்தப்படுகிறது என்பதில் பெருமை கொள்கிறேன். பல்வேறு வசதிகள் சிலாங்கூருக்கு மக்களைக் கவர்ந்திழுக்கிறது. 200,000 பார்வையாளர்கள் வருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

“பேட்மேன், சூப்பர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் எண்ணிக்கை இலக்கு தாண்டிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலையில் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு, சிலாங்கூரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அமிருடின் கூறினார்.

பெரியவர்களுக்கு RM55 மற்றும் குழந்தைகளுக்கு RM38 டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. சூப்பர்மேன், பேட்மேன், அக்வாமேன் மற்றும் வொண்டர் வுமன் போன்ற  சூப்பர் ஹீரோக்களின் திரைப்படக் கருத்துக் கலை, ஆடை மற்றும் பிரத்தியேக வணிகப் பொருள்களின் கண்காட்சி ஆகியவை இந்நிகழ்வில் இடம்பெறும்.


Pengarang :