ALAM SEKITAR & CUACANATIONAL

கிளந்தானில் நான்கு ஆறுகளில் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியது

கோத்தா பாரு, டிச 22- கிளந்தான் மாநிலத்தில் சுங்கை லெபிர், சுங்கை கோலாக் உள்பட நான்கு ஆறுகளில் நீர் மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது.

இவ்விரு ஆறுகளிலும் நீர் மட்டம் முறையே 36.78 மற்றும் 3.83 மீட்டராக பதிவான வேளையில் சுங்கை கோலோக்கின் ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் நீர் மட்டம் 10.33 மீட்டராகவும் கம்போங் ஜெனோப் பகுதியில் 24.17 மீட்டராகவும் பதிவானதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை கூறியது.

இதனிடையே, கோல கிராய், சுங்கை கிளந்தான் (23.98 மீட்டர்), சுங்கை பெர்காவ் (55.19 மீட்டர்) ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதை அவ்விரு ஆறுகளில் உள்ள நீர் கண்காணிப்பு மையங்கள் காட்டுவதாக அத்துறை தெரிவித்தது.

மேலும், சுங்கை லானாஸ், சுங்கை கிளந்தானின் தம்பாத்தான் டிராஜா பகுதி, சுங்கை கிளந்தானின் ஜெட்டி கஸ்டம் பகுதி ஆகியவையும் எச்சரிக்கை அளவைத் தொட்டுள்ளன என்று அது குறிப்பிட்டது.


Pengarang :