ECONOMYSELANGOR

மாநில அரசின் ரைட் எனப்படும் திட்டத்தில் அங்கம் பெற்றுள்ள 6500 பேருக்கு தலா 50 வெள்ளி ஈ.பி.எப் சந்தா செலுத்தப்பட்டது

ஷா ஆலம், டிச 25: ரோடா டாருல் ஏசான் திட்டத்தின் கீழ் (RiDE)  மொத்தம் 6,500  உடனடி பட்டுவாடா ( ஆன்-கால் ) தொழிலாளர்கள், அவர்களின் எதிர்கால சேமிப்பு  நிதிக்கு (EPF) RM50 பெற்றனர்.

2020 முதல் செயல்படுத்தப்படும்  இத்திட்டத்தின் வழி  சமூகப் பாதுகாப்பு திட்டம் (Perkeso)  மற்றும் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டம் (INSAN) போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“தொடங்கியதிலிருந்து  இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது, இதுவரை இத்திட்டத்திற்கு 14,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மட்டும் 6,200 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மக்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளைப் பற்றி மாநில அரசு எப்போதும் யோசித்து வருகிறது எனக் கூறினார்.

“2022 ஆம் ஆண்டுக்கான இறுதி  விண்ணப்பத்தார்கள் அவர்களின்  இபிஎஃப் பங்களிப்புக் கணக்கைத் திறக்க வெள்ளி 50 யும் ரொக்கமாக  RM500  தகுதியுடையவர்களுக்கு வழங்கப்பட்டது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

குறிப்பாக கோவிட்-19 தொற்று நோய் பரவியப் பின், இளைய சமூகம் இந்தத் துறையைச் சார்ந்திருப்பதை தொடர்ந்து ஆன்-கால் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு உணர்ந்த பிறகு ரைட் உருவாக்கப்பட்டது என்றார்.

“முதல் வருடம் நாங்கள் அவர்களுக்கு உரிமம் பெற உதவினோம், ஆனால் அனைவருக்கும் முன்னதாகவே உரிமம் இருந்தது. எனவே மாநில அரசின் பாராட்டு பங்களிப்பாக இந்த திட்டத்தை மாற்றுகிறோம்.

மாநில அரசு  இத்திட்ட   செயல்பாடுகளுக்காக  2022 ம் ஆண்டு வரவு- செலவு திட்டத்தில்   20  லட்சம் வெள்ளிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :