NATIONAL

ஆபத்தான இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்வதைக் கைவிடுங்கள்

ஷா ஆலம், டிச.25: ஆண்டு இறுதி விடுமுறைக்குப் மலைப்பாங்கான இடங்கள், காடு அல்லது பொழுதுபோக்கு பகுதிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல நினைக்கும் பெற்றோர்கள் தற்போதைக்கு அத்தகைய நடவடிக்கைகளை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாநிலத்தில் உள்ள சில சுவாரசியமான இடங்களில் உள்ளரங்க செயல்பாடுகளைச் செய்ய அழைத்துச் செல்லலாம் எனச் சிலாங்கூர் சுற்றுலா கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு AirRider 1Utama (Petaling Jaya), ஆய்ர்ரைடர் 1உத்தாமா (பெட்டாலிங் ஜெயா), Jump Street Trampoline Park Malaysia (Petaling Jaya ஜம்ப் ஸ்ட்ரீட் டிராம்போலைன் பார்க் மலேசியா (பெட்டாலிங் ஜெயா), , Mission-Q Escape Room (Petaling Jaya)மிஷன்-கியூ எஸ்கேப் ரூம் (பெட்டாலிங் ஜெயா), கேம்ப்5 உத்ரோபோலிஸ் (ஷா ஆலம்) மற்றும் Sunway Pyramid Ice (Subang Jaya) சன்வே பிரமிட் ஐஸ் (சுபாங் ஜெயா) போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

“பருவமழைக் காலத்தில் பல வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் உள்ளன, ஆனால் அது ஒரு தடையல்ல, ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ‘இன்டோர்’  நடவடிக்கைகளில் ஈடுபட அழைத்து வரலாம்.

இதற்கிடையில், விடுமுறைக் காலங்களில் சுற்றுலா பயணிகள் மலையேறுவதற்கு முகாமிடுவதற்கும் காடு மிகவும் பிரபலமான இடமாகும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“இருப்பினும், மழைக்காலத்தில் கூடாரம் தளம் அல்லது பாதை வழுக்கும் என்பதால் அப்பகுதிகளை தவிர்க்க மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

உலு சிலாங்கூரில் உள்ள பத்தாங் காலியில் நடந்த சமீபத்தியச் சம்பவத்தைப் பற்றி கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.


Pengarang :