SELANGOR

கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் நீர் மட்டம் உயர்வதால் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

ஷா ஆலம், டிச 25: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்.பி.கே.எல்) அதிவேக நடவடிக்கை குழுவை (பந்தாஸ்) அணி திரட்டி நீர் மட்ட உயர்வை எதிர்த்து  மக்களுக்கு உதவும் பணிகளுக்கு  தயாராகிறது.

காலை 6 மணி முதல் 9 மணி வரை கெலனாங் கடற்கரை, மோரிப் பாரு கடற்கரை மற்றும் பத்து லாவுட் கடற்கரை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோரிப் கடற்கரை, சுனாங் கடற்கரை மற்றும் தஞ்சோங் சிப்பாட்  ஜெட்டி ஆகிய இடங்களிலும் நீர் மட்டம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

காலை 5.37 மணியளவில் நீர்மட்டம் 5.1 மீட்டராக பதிவானதாகவும் எம்.பி.கே.எல் தெரிவித்தது.

“ஆறு உறுப்பினர்களைக் கொண்ட விரைவு குழு, அனைத்து கண்காணிப்புப் பகுதிகளிலும் கடல் நீர் பெருக்கத்தையும் , அனைத்து எம்.பி.கே.எல் உடைமைகளும் நல்ல நிலையில் இருப்பதையும் கண்டறிந்தது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கிள்ளான் மாவட்டத்தில் டிசம்பர் 23 முதல் 26 வரை எதிர்பார்க்கப்படும் வெள்ள அபாயத்தை கொண்டு வரக்கூடிய நீர் மட்டத்தின் உயர்வைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“கிள்ளான் மாவட்ட பேரிடர் செயற்பாட்டு அறை 16 முதல் 19 டிசம்பர் 2022 வரை மற்றும் 23 முதல் 26 டிசம்பர் 2022 வரை திறந்திருக்கும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :