SELANGOR

பொது மக்களின் வசதிக்காக பொது புகார் மேலாண்மை முறை- எம்.பி.எஸ்.ஏ. அறிமுகம்

ஷா ஆலம், டிச 26- அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி பொது
மக்கள் பொதுப் புகார் மேலாண்மைப் முறையைப் (எஸ்.ஐ.எஸ்.பி.ஏ.ஏ.)
பயன்படுத்தி புகார்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை
முன்வைக்கலாம் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியுள்ளது.

பொது மக்களிடமிருந்து கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் புகார்களைப்
பெறுவதற்காக நடப்பில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஐ-செஸ்போன்ஸ்
முறைக்கு மாற்றாக இந்த புதிய புகார் முறை அமல்படுத்தப்படுவதாக
மாநகர் மன்றம் கூறியது.

பொது மக்கள் இந்த புகார் மேலாண்மை முறையைப் பயன்டுத்தி எளிதாகப்
புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக ஐந்து படிநிலைகளை மட்டுமே இந்த
புதிய முறை கொண்டுள்து என அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த புதிய புகார் மேலாண்மை முறையின் வாயிலாகப் புகார்களைத்
தெரிவிப்பதோடு மட்டுமின்றி தங்களின் புகார் மீதான அடுத்தக் கட்ட
நடவடிக்கைகள் குறித்து புகார்தாரர்கள் அறிந்து கொள்ளவும்
பரிந்துரைகளை முன்வைக்கவும் நன்றி தெரிவிக்கவும் இயலும் என அந்த
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் மேலாண்மை முறை பல்வேறு துறைகளின் சேவைகளையும்
உள்ளடக்கியுள்ளதால் இதரத் துறைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்
இங்கு முன்வைக்கலாம்.

பல நபர்களிடமிருந்து பெறப்படும் ஒரே பிரச்சனை சம்பந்தப்பட்ட புகார்களை
ஒருங்கிணைப்பதையும் இந்த முறை எளிதாக்குகிறது என அதில்
கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மேலாண்மை முறை தொடர்பில் மேல் விபரங்களைப் பெற
விரும்புவோர் https://bit.ly/sispaambsa எனும் அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :